Friday, December 29, 2023

பயந்திருக்கும் இருதயத்தின் ஆசீர்வாதம்: ஒரு லெந்து காலத் தியானம்

 யாத்திரை 40 | ஞாயிறு | மார்ச் 24

நீதிமொழிகள் 28:14

எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.

 

நீதிமொழிகள் 28:14 நமக்கு ஆழ்ந்த ஞானத்தைக் கொடுக்கிறது: கர்த்தருக்கு முன்பாக எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான். ஆனால் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவன் துன்பத்தில் விழுகிறான். நாம் பரிசுத்த லெந்து காலத்திற்குள் நுழையும்போது, பயந்திருக்கும் இருதயத்தில் காணப்படும் ஆசீர்வாதத்தைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம் - பயத்தோடும் பணிவோடும், ஆழ்ந்த விசுவாசத்துடனும் கர்த்தரை அணுகும் இருதயத்தைக் கர்த்தர் எதிர்ப்பார்க்கிறார்.

லெந்து காலம் என்பது சுய பரிசோதனை, மனந்திரும்புதல், ஆவிக்குரிய புதுப்பித்தல் ஆகியவற்றின் காலமாகும். நம்முடைய சிருஷ்டிகருக்கு முன்பாக மனத்தாழ்மையோடு இருக்கும்போது வரும் ஆசீர்வாதத்தைத் தேடி, நம்முடைய இருதயங்களின் நிலையை ஆராய அது நம்மை அழைக்கிறது.

பயந்திருக்கும் இருதயத்தின் ஆசீர்வாதம்” என்பது சுய பரிசோதனை மற்றும் கர்த்தரின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ளும் பயபக்தியுடன் அணுகுவதற்கான சரியான தேர்வை உள்ளடக்கியது. அவருடைய பிரசன்னத்திற்கு உணர்திறன் கொண்ட, அவரது வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு, அவரது கிருபையின் உருமாற்ற வேலைகளுக்கு ஒப்புக் கொடுக்கும் ஓர் இருதயத்தை வளர்ப்பதற்கான ஒரு வாய்ப்பு இது.

லெந்து காலத்தின் போது சுய பரிசோதனை நமக்கு வழிகாட்டும் ஒளியாக மாறும். கர்த்தருக்கு முன்பாக மனத்தாழ்மையும் பயபக்தியும் கொண்ட ஓர் ஆவியை நாம் எப்படி வளர்க்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, நம்முடைய இருதயங்களின் இருக்கும் நிலை பற்றி நாம் சிந்திக்கிறோம். பயந்திருக்கும் இருதயத்தின் ஆசீர்வாதத்தைத் தழுவுவது அவருடனான ஆழமான, நெருக்கமான உறவுக்கு நம்மை எவ்வாறு இட்டுச் செல்லும் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம்.

 

ஜெபம்: பரலோகப் பிதாவே, இந்த லெந்து கால பயணத்தில், நடுங்கும் இருதயத்தின் ஆசீர்வாதத்தை எங்களுக்கு வழங்கும். உமக்கு முன் உள்ள எங்கள் பயபக்தியும் பணிவும் உமது பிரசன்னத்துடன் ஓர் ஆழமான தொடர்பிற்கு எங்களை இட்டுச் செல்லட்டும். உமது உருமாற்ற கிருபைக்குத் திறந்திருக்கும் இருதயத்தை வளர்ப்பதற்கு எங்கள் சுய பரிசோதனை வழிகாட்டட்டும். இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

 

சுய பரிசோதனை: கர்த்தருக்கு முன்பாக பயமும் விசுவாசமும் நடுக்கமும் நிறைந்த இருதயத்தை நீங்கள் எந்த வழிகளில் வளர்த்துக்கொள்ளலாம்? லெந்து காலத்தின் போது இந்தத் தோரணையைத் தழுவுவது அவருடனான ஆழமான மற்றும் நெருக்கமான உறவுக்கு எவ்வாறு வழிவகுக்கும்?

No comments:

Post a Comment