Friday, December 29, 2023

தன்னார்வத் தொண்டு அல்லது சேவைச் செய்: ஒரு லெந்து காலக் காணிக்கை

 யாத்திரை 14 | செவ்வாய் | பிப்ரவரி 27

ஏசாயா 1:17

நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.

 

நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் இரட்சிக்கப்பட்டதன் நிமித்தம், திக்கற்றவர்களின் நலனைப் பேணுவதற்கு ஏசாயா 1:17 ஓர் அழைப்பை விடுக்கிறது. அதாவது, இந்த லெந்து காலத்தில் நாம் பெற்ற பாவநிவர்த்திக்குப் பிரதியுத்திரமாக தன்னார்வத் தொண்டு மற்றும் பொதுநலச் சேவைகள் செய்து உருமாற்ற வல்லமையைத் தழுவிக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.

லெந்து காலம் என்பது சுய பரிசோதனை, மனந்திரும்புதல் மற்றும் புதுப்பித்தலுக்கான நேரமாகும். நமது செயல்களை மறுமதிப்பீடு செய்யவும், கடந்த கால தவறுகளைத் திருத்துவதற்கான வழிகளைத் தேடவும், நமது குறைபாடுகளைச் சரிசெய்யவும் இது நம்மை அழைக்கிறது. சேவை மற்றும் தன்னார்வச் செயல்களில் ஈடுபடுதல் ஏசாயாவின் அறைகூவலுக்கு ஏற்ப ஒரு வல்லமை வாய்ந்த உருமாற்றத் தடத்தை அமைத்துத் தருகிறது.

தன்னார்வத் தொண்டும், சேவைச் செய்யும் மனப்பான்மையும் இயேசு கிறிஸ்து நமது பாவத்தைப் போக்க சிந்திய இரத்தத்தை அங்கீகரிக்கும் நமது வெளிப்பாடுகள். அவை நல்லதைச் செய்வதற்கும், நீதியைப் பெறுவதற்கும், ஒடுக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் அல்லது தேவைப்படுபவர்களின் துன்பத்தைத் தணிப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும். பிறருக்கு உதவிக்கரம் நீட்டுவதன் மூலம், மனந்திரும்புதல் மற்றும் மன மாற்றத்தின் சாராம்சத்தை நாம் வெளிப்படுத்துகிறோம்.

சுய பரிசோதனை நமது லெந்து கால பயணத்தை வழிநடத்துகிறது. நீதியைப் பெறவோ அல்லது ஒடுக்குமுறையைத் திருத்தவோ நாம் எங்கே தவறியிருக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, நமது கடந்த கால நடவடிக்கைகளையும் செயலற்ற தன்மைகளையும் நாம் சிந்திக்கிறோம். தன்னார்வத் தொண்டு மற்றும் சேவைகள் மூலம் நம்மை நாம் எவ்வாறு திருத்திக் கொள்ளலாம் என்று ஆராய்கிறோம்.

 

ஜெபம்: பரலோகப் பிதாவே, இந்தப் பரிசுத்த லெந்து காலத்தில், எங்களுடைய குறைபாடுகளுக்குப் பரிகாரம் செய்ய ஞானத்தையும் கிருபையையும் தேடுகிறோம். தொண்டூழியச் செயல்கள் மூலம் நல்ல மற்றும் சரியான காரியங்களைச் செய்யக் கற்றுக்கொள்ள எங்களுக்கு உதவும். நாங்கள் நீதியை நாடும்போதும், தேவைப்படுபவர்களுக்கு அன்பையும் இரக்கத்தையும் காட்டும்போதும் எங்கள் சுய பரிசோதனை மாற்றத்திற்கு வழிவகுக்கட்டும். இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

 

சுய பரிசோதனை: கடந்த கால செயல்கள் அல்லது செத்த கிரியைகளுக்குப் பரிகாரம் தேட தொண்டூழியச் செயல்களில் நீங்கள் எந்த வழிகளில் ஈடுபடலாம்? இந்த லெந்து காலத்தில் தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நீங்கள் எவ்வாறு நீதியைக் கொண்டு வர முடியும்? அல்லது விதவையின் நலனுக்காக வாதிடலாம்?

No comments:

Post a Comment