35. பார்வோனின் தற்காலிக மனந்திரும்புதல்: பிடிவாதம் மற்றும் தற்பெருமையைத் தகர்த்தும் படிப்பினைகள்

வேத வாசிப்பு: யாத்திராகமம் 9:2728; 10:1617

 

தியானம்:

மோசேயின் காலத்தில் எகிப்தின் அரசனாக இருந்த பார்வோன், தேவனால் அனுப்பப்பட்ட தொடர்ச்சியான அழிவுகரமான வாதைகளை எதிர்கொண்டான். ஆரம்பத்தில், எகிப்துக்கு துன்பம் கொடுத்த போதிலும் இஸ்ரவேலரை விட்டுவிடக் கூடாது என்று பார்வோன் பிடிவாதமாக எதிர்த்தான். எனினும், வாதைகள் தீவிரமாக அதிகரிக்க, பார்வோனின் தீர்மானம் தற்காலிகமாக பலவீனமடையும்.

 

அவன் தனது பாவத்தை ஒப்புக்கொண்டு, வாதைகளை அகற்ற கர்த்தரிடம் பரிந்துரை செய்யும்படி மோசேயிடம் கெஞ்சினான். பார்வோனின் உதாரணம் ஓர் எச்சரிக்கைக் கதையாக வெளிப்படுகிறது. அது, தற்பெருமையின் விளைவுகளையும் தற்காலிக மனந்திரும்புதலின் கணநேர இயல்பையும் விளக்குகிறது.

 

தேவனுக்கு முன்பாக உண்மையான மனத்தாழ்மையைத் தழுவவும், அவருடைய மன்னிப்பையும் நம் வாழ்வில் மாற்றத்தையும் நாடவும் இது நம்மை அழைக்கிறது. வாதைகளின் போது பார்வோனின் மனந் திரும்புதல் அதன் தற்காலிக மற்றும் நேர்மையற்ற தன்மையால் குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு தடவையும் அவன் மனம் திருந்தி வேதனைப் பட்டான்.

 

பிற்பாடு மறுபடியும் தன் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். தன் வழிகளை நிரந்தரமாக மாற்றிக்கொள்ள அவன் மறுத்துவிட்டான். பாவத்தை விலக்கி, கர்த்தரின் சித்தத்திற்கு கீழ்ப்படிவதற்கான உண்மையான விருப்பத்திற்குப் பதிலாக, அவனது செயல்கள் உடனடி விளைவுகளுக்கு அதிகமாக எதிர்வினை காட்டின.

 

பார்வோனின் கதை நமக்கு ஒருபக்கம் எச்சரிக்கையாகவும் மறுபக்கம் தேவனின் மாபெரும் கிருபையின் நியாயத்தை வெளிப்படுத்துகிறது. உண்மையான மனந்திரும்புதலின் ஆழத்தையும் அதன் நடைமுறை சாத்தியத்தையும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. அவனது பாவங்களுக்குப் பரிசுத்த நியாயத்திற்குரிய தண்டனை வந்தபோதும், அவனின் தற்காலிக மனந்திரும்புதலின் எண்ணம் நமக்கு எச்சரிக்கையாக உள்ளது.

பயன்பாடு:

  1. கர்த்தரின் எச்சரிக்கைகள் மற்றும் நியாயத்தீர்ப்புகளுக்கு முன்னால் பிடிவாதம் மற்றும் தற்பெருமையின் ஆபத்துகளைப் பற்றி பார்வோனின் கதை நம்மை எச்சரிக்கிறது.
  2. இது உண்மையான மனந்திரும்புதலின் முக்கியத்துவத்தை முதன்மைப் படுத்திக் காட்டுகிறது. இது தவற்றை நேர்மையாக ஒப்புக்கொள்வதையும் மாற்றத்திற்கான அர்ப்பணிப்பையும் உள்ளடக்கியது.
  3. விசுவாசிகளாகிய நாம் நம்முடைய சொந்த இருதயங்களை ஆராய்ந்து பார்க்க உற்சாகப்படுத்தப்படுகிறோம். கர்த்தருடைய தூண்டுதல்கள் அல்லது எச்சரிக்கைகளுக்கு எதிராக நாம் நம்மை கடினப்படுத்திய பகுதிகள் உள்ளனவா?

 

ஜெபம்:

  1. கர்த்தரின் எச்சரிக்கைகளையும் திருத்தங்களையும் உண்மையுடன் ஏற்றுக் கொள்வதற்காக, மனதின் தாழ்மையை வளர்க்க உதவி நாடி ஜெபி.
  2. உரிமையின் பிடிவாதத்தையும் தற்பெருமையையும் விலக்கி, மனந் திரும்பிய இருதயத்துடன் தேவனின் முன்னிலையில் தாழ்த்துக்கொள்ள கிருபை நாடி ஜெபி.
  3. கர்த்தரின் திருத்தங்களை விளக்கும் போது, ஓர் உண்மையான மனந் திரும்தலையும் நிரந்தரமான மாற்றத்தையும் உள்ளடக்கிய உள்ளத்தை வேண்டி ஜெபி.

 

சுய பரிசோதனை:

  1. பார்வோனின் கதை கர்த்தரின் திருத்தம் அல்லது எச்சரிக்கைகளுக்கு எனது சொந்த பதில்களை எவ்வாறு உருவாக்குகிறது?
  2. உண்மையான, நிலையான இருதய மாற்றத்திற்குப் பதிலாக என்னென்ன வழிகளில் தற்காலிக மனந்திரும்புதலுக்கு ஆளாகிறேன்?
  3. கர்த்தருடைய வார்த்தைக்குப் பதிலளிக்கிற, நிரந்தரமான மனந்திரும்புகிற இருதயத்தை வளர்த்துக்கொள்ள நான் என்ன படிகளை எடுக்கலாம்?
  4. வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளை சமாளிக்கும்போது, கர்த்தரின் கட்டளைகளையும் எச்சரிக்கைகளையும் முழுமையாக பின்பற்றுவதற்கு நான் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

Comments