10. கோமர்ஸ் ரிட்டர்ன்: மனந்திரும்புதல் மற்றும் மறுசீரமைப்பின் சின்னம்
வேத
வாசிப்பு: ஓசியா 3
தியானம்:
ஓசியாவின்
தீர்க்கதரிசன புத்தகத்தில், தீர்க்கதரிசியின் மனைவி கோமேர், கர்த்தருக்கு
இஸ்ரவேலரின் உண்மையற்ற தன்மையை அடையாளப் படுத்துகிறாள். இஸ்ரவேலர் விக்கிரகங்களிடம்
திரும்பி கர்த்தரின் அன்பைப் புறக்கணித்தது போலவே, அவள் வேறு
இடங்களில் திருப்தியைத் தேடி அலைந்தாள். அவள் உண்மையற்றவளாக இருந்த போதிலும்,
திரும்பக் கொண்டு வரவும், அவளை மீண்டும்
நேசிக்கவும் தேவனால் ஓசியா கட்டளையிடப்பட்டான். இது அவருடைய ஜனங்கள் மீதான தேவனின்
நீடித்த அன்பைப் பிரதிபலிக்கிறது. கோமேரின் கதை கர்த்தரின் பாதையிலிருந்து விலகி,
சிற்றின்பங்கள் மற்றும் உலக கவனச்சிதறல்களில் நிறைவைத் தேடும்
மனிதகுலத்தின் போக்கைப் பற்றிய சித்தரிப்பாகும்.
இருப்பினும், ஓசியா 3ல்,
மனந்திரும்புதல் மற்றும் மறு சீரமைப்பின் ஓர் அழகான காட்சியை நாம்
காண்கிறோம். கோமேர், அலைந்து திரிந்த பிறகு, ஓசியாவினிடத்தில் மனந் திரும்புகிறாள். இந்தச் செயல் இஸ்ரவேலின் இறுதி
மனந் திரும்புதலையும், தேவன் தம்முடைய ஜனங்களைக் கிருபையுடன்
மீட்டெடுப்பதையும் பிரதிபலிக்கிறது. நாம் எவ்வளவு தூரம் வழிதவறி விட்டாலும்,
தேவனுடைய அன்பு நிலையானது. நாம் அவரிடம் மனந்திரும்பும்போது நம்மை
மன்னிக்கவும் மீட்டெடுக்கவும் அந்த அன்பு எப்போதும் தயாராக இருக்கிறது என்று
இக்கதை நமக்குக் கற்பிக்கிறது.
ஓசியாவின்
மனந்திரும்தலின் செயல்முறையும், கோமேரின் மீட்சியும் தேவனுடைய கிருபையால் தூண்டப்படும் மாற்றத்தின்
சக்தியை எடுத்துக் காட்டுகின்றன. கோமேரின் மீட்பு கடவுளின் உள்மனித தன்மையையும்,
அவரது மக்களிடம் காட்டும் கருணையையும் நம்மிடம் வெளிப்படுத்துகிறது.
தேவனுடைய விசுவாசமும் அன்பும் எவ்வளவு பெரியவையோ, அவ்வளவாக
அவற்றின் ஆழத்தை உணர நம்மை அழைக்கின்றது. நம்முடைய நம்பிக்கை மற்றும்
விசுவாசத்தில் நாம் இவற்றைக் கொண்டு இன்னும் உறுதியுடன் வாழ்ந்திடுவோம்.
பயன்பாடு:
- தெய்வீக அன்பை ஏற்றுக்கொள்வது: தேவனுடைய மாறாத அன்பையும் கிருபையையும் உன் வாழ்க்கையில் அனுபவிக்க மனந்திரும்பு.
- சுய
பரிசோதனை: உன் ஆன்மீக பயணத்தைப் பரிசோதித்து,
தேவனுடைய வழியில் நீடித்திருக்க பாடுபடு.
- புதிய
தொடக்கங்கள்: கடந்தகாலத்தின் தவறுகளிலிருந்து பின்வாங்கி, தேவனின் கிருபை மூலம் புதிய
தொடக்கங்களை மேற்கொள்.
- சமூகத்தில்
மாற்றத்தை ஊக்குவிக்க: உன் சமூகத்தில் மனந்திரும்புதல் மற்றும் மறுசீரமைப்பு
கலாச்சாரத்தை ஊக்குவிக்க, அவர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கு.
- மன்னிப்பு
மற்றும் ஒப்புரவு: தேவனின் அன்பைப் போலவே,
உன் வாழ்வில் மற்றவர்களை மன்னித்து, அவர்களுடனான
உறவுகளில் ஒப்புரவையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்.
ஜெபம்:
- உன் வாழ்க்கையில் ஆவிக்குரிய பிரகாரமாக உண்மையற்றவனாக இருந்த பகுதிகளை அடையாளம் காண வேண்டிக் கொள்.
- மனந்திரும்புதலின்
ஆவியையும், முழு
மனதுடன் தேவனிடம் மனந் திரும்புவதற்கான விருப்பத்தையும் தேவன் தூண்டிவிட வேண்டிக்
கொள்.
- அவருடனான உறவில் ஒப்புரவையும் மறுசீரமைப்பையும் தேட தைரியத்தை வேண்டி ஜெபி.
- நீ தடுமாறினாலும் அவரது மாறாத அன்புக்கும் விசுவாசத்துக்கும் நன்றி செலுத்து.
சுய
பரிசோதனை:
- தேவனுடைய
சித்தத்திற்குப் புறம்பாக நான் சுய விருப்பஙகளை நாடிய நேரங்கள் உண்டா?
- மற்றவர்களுடனான
எனது உறவுகளில் ஓசியாவின் அன்பையும் மன்னிப்பையும் நான் எவ்வாறு பின்பற்ற முடியும்?
- தேவனிடம்
திரும்பவும், என்
வாழ்க்கையில் அவருடைய மறுநிலைப்படுத்தும் கிருபையை அனுபவிக்கவும் நான் என்ன படிகளை
எடுக்க முடியும்?
Comments
Post a Comment