30. நீதி, இரக்கம், மனத்தாழ்மைக்கான மீகாவின் அழைப்பு

வேத வாசிப்பு: மீகா 6:8

 

தியானம்:

தேவனுடைய தீர்க்கதரிசியான மீகா, இஸ்ரவேலர்களை மனந்திரும்புதலுக்கும் நீதிக்கும் அழைக்கும் ஒரு வல்லமையான செய்தியை வழங்கினான். அவன் கர்த்தரின் சார்பாகப் பேசி நீதி, இரக்கம் மற்றும் மனத்தாழ்மை ஆகியவற்றின் முக்கிய கொள்கைகளை வலியுறுத்தினான். இவை வெறுமனே நெறிமுறை வழிகாட்டுதல்கள் அல்லாமல், கர்த்தருக்கு முன்பாக சரியாக வாழ்வதற்கான அத்தியாவசிய கூறுகளாகவும் திகழும்.

 

மீகாவின் தீர்க்கதரிசனம் இஸ்ரவேலர் தங்கள் வாழ்க்கையைத் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப மறுசீரமைக்க அழைப்பு விடுத்தது. அவர்களுடைய கீழ்ப்படியாமை மற்றும் அநீதியின் விளைவுகளை அவன் எதிர்கொண்டு, மனந்திரும்புதலின் மூலம் கர்த்தருடன் நல்லிணக்கத்தைத் தேடும்படி அவர்களை வலியுறுத்தினான். தீர்க்கதரிசியின் வார்த்தைகள், தேவ ஜனங்கள் தங்கள் செயல்களிலும் மனப்பான்மைகளிலும் அவருடைய குணாதிசயங்களைப் பிரதிபலிக்க வேண்டும் என்றும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும், தேவைப்படுபவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்றும், அவருக்கு முன்பாக கீழ்ப்படிதலிலும் பயபக்தியிலும் தாழ்மையுடன் நடக்க வேண்டும் என்றும் தேவனின் விருப்பத்தை வெளிப்படுத்தின.

 

நீதி, இரக்கம் மற்றும் மனத் தாழ்மைக்கான கர்த்தரின் இருதயத்தைப் பிரதிபலிக்கும் உத்தமத்துடனும் இரக்கத்துடனும் வாழ மீகாவின் தீர்க்கதரிசனம் நமக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. தேவனுடைய சித்தத்துடன் நம் வாழ்க்கையை சீரமைக்கவும், நாம் செய்யும் எல்லாவற்றிலும் அவரை மகிமைப்படுத்தவும் அவரது அழைப்புக்குச் செவிசாய்ப்போமாக.

 

நாம் மீகா 6:8ல் காணும் தீர்க்கதரிசியான மீகாவின் உணர்ச்சிகரமான அழைப்பை ஆராயலாம். இஸ்ரவேலர்களை மனந்திரும்புதலுக்கும் நீதிக்கும் அழைத்த மேன்மையான சரித்திரம் இங்கே வெளிப்படுகிறது. நீதி, இரக்கம் மற்றும் மனத்தாழ்மை ஆகியவற்றின் கர்த்தரின் அழைப்பை நாம் நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் தேவனின் விருப்பத்தை நம் வாழ்க்கையில் பூரணமாக நடைமுறையில் கொண்டு வரும் உணர்ச்சியை நாம் கையாள்போம்.

 

 

பயன்பாடு:

  1. நமது நாள் தினம் வாழ்விலும், எல்லா தொடர்புகளிலும், தேவனுடைய நீதியை வெளிப்படுத்த வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நியாயத்துடனும், சீரான முறையிலும் நடந்து, அவர்களின் உரிமைகளை காக்க வேண்டும்.
  2. தேவனுடைய இரக்கத்தை நம்முடைய செயல்களிலும், வார்த்தைகளிலும் பிரதிபலிக்கவும், அநியாயத்துக்கு ஆளானவர்களுக்கு இரக்கத்துடனும் பரிவுத்தனத்துடனும் அணுக வேண்டும். நமக்கு அநீதி செய்தவர்களுக்கும் மன்னிப்பு மற்றும் கருணை காட்ட வேண்டும்.

 

ஜெபம்:

  1. உனது எல்லா தொடர்புகளிலும் நீதியாக நடந்து, மற்றவர்களை நியாயத்துடனும் இரக்கத்துடனும் நடத்த உதவி செய்யுமாறு ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்.
  2. ஆண்டவர் இரக்கத்தை நேசிப்பது போல, உனக்கு அநீதி இழைத்தவர்களுக்குத் தயவையும் மன்னிப்பையும் காட்டும்படி போதித்தருளுமாறு ஜெபி.
  3. ஆண்டவரைச் சார்ந்திருப்பதை உணர்ந்து, எல்லாவற்றிலும் அவரின் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்திருக்க உனக்குத் தாழ்மையைத் தந்தருளுமாறு மன்றாடு.

 

சுய பரிசோதனை:

  1. என் வாழ்க்கையில் நீதி, இரக்கம் மற்றும் மனத்தாழ்மைக்கான மீகாவின் அழைப்பை நான் தற்போது எவ்வாறு பிரதிபலிக்கிறேன்?
  2. மீகா இஸ்ரவேலரை ஏவியது போல, எந்தெந்த பகுதிகளில் நான் மனந்திரும்பி தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப என்னை மறுசீரமைக்க வேண்டும்?
  3. நீதி, இரக்கம், மனத்தாழ்மை ஆகியவற்றின் செயல்களின் மூலம் தேவனுடனும் மற்றவர்களுடனும் நான் எவ்வாறு நல்லிணக்கத்தைத் தேட முடியும்?

Comments