3. அப்போஸ்தலன் பேதுரு: மறுதலிப்பிலிருந்து மறுசீரமைப்பு வரை
யோவான் 21:1519
தியானம்:
பேதுரு
இயேசுவை விசாரணை செய்த போதும், சிலுவையில் அறையப்பட்டபோதும் மூன்று முறை மறுதலித்தான். இயேசு
உயிர்த்தெழுந்த பிறகு, அவர் கலிலேயா கடலோரத்தில் பேதுருவுக்கும்
மற்ற சீஷர்களுக்கும் காட்சியளித்தார். பேதுருவின் மூன்று மறுதலிப்புகளுக்கு இணையாக,
இயேசு பேதுருவை ‘நேசிக்கிறாயா’ என்று மூன்று முறை கேட்டார். ஒவ்வொரு
தடவையும் பேதுரு இயேசுமீது தனக்குள்ள அன்பை உறுதிப்படுத்தினான். "என் ஆடுகளை
மேய்ப்பாயாக," என்று மும்முறை இயேசு அவனிடம் சொன்னார்.
எதிர்காலத்தில் பேதுரு உயிர்த் தியாகம் செய்யப் போவதைக் குறித்தும் இயேசு
தீர்க்கதரிசனம் உரைத்தார்; பேதுரு மனந் திரும்புவதும் மறு
சீரமைப்பு பெறுவதும் முக்கியம் என்பதைக் காட்டினார்.
இந்த
உரையாடல் மறு சீரமைப்பையும் ஒப்புரவையும் வலியுறுத்துகிறது. இயேசு திரும்பத்
திரும்பக் கேள்வி கேட்பது மன்னிப்பைச் சிறப்பித்துக் காட்டுவதோடு, ஒரு தலைவராக பேதுருவின் பங்கை
மறுபடியும் உறுதிப்படுத்துகிறது. ஆரம்பகால திருச்சபையை வளர்ப்பதிலும் வழி
நடத்துவதிலும் பேதுருவின் எதிர்கால பங்கை மேய்ப்பின் உருவகம் முதன்மைப் படுத்திக்
காட்டுகிறது. பேதுருவின் பதில்களும் இயேசுவின் கட்டளையும் பேதுருவிடமிருந்து ஓர்
ஆழமான ஆவிக்குரிய புதுப்பித்தலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றன.
பேதுருவுடனான
இயேசுவின் தொடர்பு அவரது கிருபையையும் குறிப்பிடத்தக்க தோல்விகளுக்குப் பிறகும்
மன்னிக்கும் விருப்பத்தையும் நிரூபிக்கிறது. பேதுருவின் மனந் திரும்புதலும்
இயேசுவின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டதும் பாவ வீழ்ச்சியிலும் தோல்வியிலும் போராடும்
அனைத்து விசுவாசிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்தது. ‘ஆடுகளை மேய்க்கும்’
அழைப்பு பேதுருவிடத்திலும் அடுத்தடுத்த திருச்சபை தலைவர்களிடத்திலும்
ஒப்படைக்கப்பட்ட ஆயர் பொறுப்பையும் தலைமைத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
பயன்பாடு:
- பேதுருவின்
மனந்திரும்புதல், மன்னிப்பு
மற்றும் மீண்டும் உயரும் அழைப்பு நம்மையும் மனந்திரும்பச் செய்து தேவன்
முன்னிலையில் புதிய ஒப்புரவையும் அர்ப்பணிப்பையும் பெறத் தூண்டுகிறது.
- இதேபோல், மற்றவர்களுக்கு ஊழியம்
செய்தல், பராமரித்தல் மற்றும் தலைமை ஏற்றுக் கொள்வதில்
நமக்குள்ள கர்த்தரின் கிருபையையும் மன்னிப்பையும் வெளிப் படுத்த உதவுகிறது.
- மேலும், நாம் இயேசுவின் கட்டளைகளை
அடிக்கடி மறுபடியும் சிந்தித்து, அவருடைய சித்தத்திற்கு ஏற்ப
நம்மை மாற்றிக் கொள்ளவும் உதவுகிறது.
- நாம்
எப்போதும் தேவனின் முன்னிலையில் தாழ்மையோடு நிற்க, அவருடைய செவியில் நமது மனந்திரும்புதலையும்,
பாசத்தையும் வெளிப்படுத்தவும் தேவனின் அழைப்பை உணர்ந்து செயல்
படுவோமாக. இவைகளின் மூலம், நமது ஆன்மிகப் பயணத்தை
வலுப்படுத்துவோம்.
ஜெபம்:
- பாவங்களிலிருந்து மனந்திரும்பி இயேசுவின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள தாழ்மையான இருதயத்திற்காக ஜெபி.
- அன்புடனும் பணிவுடனும் மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவும் பராமரிக்கவும் வலிமையைக் கேள்.
- சவால்களுக்கு மத்தியில் கிறிஸ்துவினிடத்தில் அசைக்க முடியாத விசுவாசத்தைக் காட்டும் படியாக ஜெபி.
சுய
பரிசோதனை:
- எனது
தோல்விகளிலும் பாவங்களிலும் நான் எவ்வாறு பதிலளிப்பது?
- நான்
இயேசுவின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு ஒப்புரவை நாடுகிறேனா?
- நான்
எவ்வாறு மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய முடியும்? தேவாலயத்திலும் சமூகத்திலும் எவ்வாறு எனது பங்கை
நிறைவேற்ற முடியும்?
Comments
Post a Comment