48. நேபுகாத்நேச்சாரின் தாழ்மையும் மனந்திரும்புதலும்
வேத வாசிப்பு: தானி. 4:3437 தியானம்: பாபிலோனின் வலிமை மிக்க ராஜாவான நேபுகாத்நேச்சார் , தேவனுடனான ஆழமான சந்திப்பின் மூலம் தற்பெருமையிலிருந்து மனத் தாழ்மைக்கு வியத்தகு மாற்றத்தை அனுபவித்தான். ஆரம்பத்தில் ஆணவத்துக்கும் சுய மேன்மைக்கும் பெயர் பெற்ற நேபுகாத்நேச்சார் பைத்தியக் காரத்தனத்தின் வடிவத்தில் தெய்வீக நியாயத்தீர்ப்பை எதிர் கொண்டான் அந்த நேரத்தில் அவன் ஒரு காட்டு விலங்கைப் போல வாழ்ந்தான். இந்த தாழ்மையான அனுபவம் நேபுகாத் நேச்சாரின் தற்பெருமைக்குக் கர்த்தரின் பதிலாக இருந்தது. இது எல்லா ஆட்சியாளர்கள் மற்றும் தேசங்கள் மீதும் அவரது இறையாண்மையை நிரூபிக்கிறது. கொஞ்சக் காலம் பைத்தியமாக இருந்த நேபுகாத்நேச்சார் அதிலிருந்து சுகம் பெற்று , கர்த்தருடைய ஈடற்ற உன்னத அதிகாரத்தையும் வல்லமையையும் மனத் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டான். தங்களை உயர்த்துகிறவர்களை தேவன் தாழ்த்துகிறார் என்று அறிவித்து , தேவனுடைய நீதிக்காக அவன் தேவனைத் துதித்தான். நேபுகாத்நேச்சார் மனந் திரும்பியதையும் , தற்பெருமைமிக்க அரசனாக இருந்து உண்மையான பரலோக ராஜாவின் தாழ்மையான ஊழியனாக மாறியதையும் இந்த அங்கீகாரம் குறித்தது. ...